Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0044

அறத்துப்பால் – Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

மு. உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் = பொருள் செய்யுங்கால் பாவத்தை யஞ்சி யீட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தானுண்டலை ஒருவனில் வாழ்க்கை உடைத்தாயின்;
வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் = அவன் வழி உலகத் தெஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தலில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பாவத்தான் வந்த பிறன்பொருளைப் பகுத்துண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவந் தன்மேலுமாய் நின்று வழியெஞ்சுமாகலின், பழியஞ்சி யென்றார்.
வாழ்வான துடைமை வாழ்க்கைமே லேற்றப்பட்டது.

கருணாநிதி  உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

Couplet:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

Explanation:
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.


No comments