Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0042


அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

மு. உரை:
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) துறந்தார்க்கும் = களைகணானவராற் றுறக்கப்பட்டார்க்கும்;
துவ்வாதவர்க்கும் = நல்கூர்ந்தார்க்கும்;
இறந்தார்க்கும் = ஒருவருமின்றித் தன்பால் வந்திறந்தார்க்கும்;
இல்வாழ்வான் என்பான் துணை = இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் துணை.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
துறந்தார்க்குப் பாவமொழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும்துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும்இறந்தார்க்கு நீர்க்கடன் முதலியசெய்து நல்லுலகின்கட் செலுத்தலானும் துணை யென்றார்.
இவை யிரண்டுபாட்டானும் இன்னிலை எல்லாவுபகாரத்திற்கு முரித்தாதல் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
பற்றற்ற துறவிகட்கும்பசியால் வாடுவோர்க்கும்பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர்வறுமைப்பட்டவர்இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

Couplet:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

Explanation:
To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay.



No comments