Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0028

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

மு.வ உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) நிறைமொழிமாந்தர் பெருமை = நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை;

நிலத்து மறைமொழி காட்டி விடும் = நிலவுலகத்தின் கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

'நிறைமொழி' என்பது அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி.

'காட்டுதல்', பயனான் உணர்த்துதல்.

கருணாநிதி  உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் செ?ன்ன மந்திரச் செ?ற்களே அடையாளம் காட்டிவிடும்.

Couplet:
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

Explanation:
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

No comments