Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0019

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

வான் சிறப்பு - The Blessing of Rain

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

மு.வ உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

பரிமேலழகர் உரை:(இதன்பொருள்) வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா = அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா;

வானம் வழங்காது எனின் = மழை பெய்யாதாயின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

'தான'மாவது, அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல்.

'தவ'மாவது, மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டிசுருக்கல் முதலாயின.

பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின்மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.

கருணாநிதி  உரை:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

Couplet:
If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

Explanation:
If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'.

No comments